அந்த மனசுதான் சார் கடவுள்.. தீவிர ரசிகர் - ரசிகையின் திருமண வரவேற்பில் நடிகர் சூர்யா செய்ததை பாருங்க..! திக்குமுக்காட வைத்த உன்னத தருணம்..!!
அந்த மனசுதான் சார் கடவுள்.. தீவிர ரசிகர் - ரசிகையின் திருமண வரவேற்பில் நடிகர் சூர்யா செய்ததை பாருங்க..! திக்குமுக்காட வைத்த உன்னத தருணம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. இவரது தீவிர ரசிகர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ். இவருக்கும் அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ஆம் தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து, மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது திடீரென கணேசன் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்ததால் அவர் எடுத்துப் பார்த்தபோது, நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம்விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் கூறியுள்ளார்.
அத்துடன் தான் ஒரு மாத காலமாக வெளியூரில் இருப்பதால் பின்வந்து சந்திப்பதாகவும் கூறினார். திருமண வரவேற்பு நடக்கும்போதே சூர்யா வாழ்த்துக்கூறிய சம்பவம் மணமக்கள் இருவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. தனது தீவிர ரசிகர், ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் வாழ்த்துக்கூறியது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.