RIP Mayilsamy: மயில்சாமியின் இறப்பை எண்ணி கண்கலங்கி அழுத நடிகை தம்பி ராமையா.. உருக்கமான பேச்சு.!
RIP Mayilsamy: மயில்சாமியின் இறப்பை எண்ணி கண்கலங்கி அழுத நடிகை தம்பி ராமையா.. உருக்கமான பேச்சு.!
தமிழ் திரையுலகில் பலகுரல் மன்னனாகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம்வந்தவர் மயில்சாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது சார்ந்த பகுதிக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என அரசியலியிலும் விறுவிறுப்புடன் களமிறங்கி இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காலமாகினார். சிவன் பக்தரான அவர் சிவராத்திரி அன்றே இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அவர் ஒரு நிகழ்கால வள்ளல். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும், சொத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை முழுநேர கொள்கையாக கொண்டு வாழ்ந்தவர் அவர். 57 வயது மரணிக்கும் வயது இல்ல. தான் வசித்து வரும் பகுதியில் அவர் மிகப்பெரிய நல்ல மனிதராக இருந்துள்ளார்.
ஒருமனிதரின் மரணம் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லும். 1997ல் நான் முதலில் திரைத்துறையில் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தபோது பலருடன் மயில்சாமியை நேரில் காண்கிறேன். நானும் பலரை போல மிமிக்கிரி கேசட்டை பார்த்து ரசித்து நேரில் அவரை சந்திக்கிறேன். படிப்பறிவு இல்லை என்று கூறி பயம் கொள்ளும் நிலையிலும், அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை உபயோகம் செய்துகொண்டுள்ளார்.
மரணம் அனைவர்க்கும் சாதாரணமாகிவிட்டது. நானும் ஒரு தந்தை. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அனைவரும் ஒருநாள் இறங்கத்தான் செல்கிறோம். ஆனால், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஏற்படும் சோகம் அளப்பரியது. சிவன் அவரை அழைத்து சென்றுவிட்டார். சின்னக்கலைவாணர் விவேக்கின் மரணமே இன்று வரை ஜீரணிக்க இயலவில்லை. மயில்சாமியின் மரணம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என கண்ணீர் ததும்ப பேசினார்.