பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் விஜய்!
Actor vijay again joins with mohan raja
நடிகர் விஜய் ஜெயம் ரவியின் சகோதரரான மோகன்ராஜாவின் இயக்கத்தில் விரைவில் நடிக்க உள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.
‘கோமாளி’ படத்தின் புரொமோஷனில் கலந்துக் கொண்ட ஜெயம் ரவியிடம், விஜய் – மோகன்ராஜா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ஜெயம் ரவி, “விஜய்யும் மோகன்ராஜாவும் மிகவும் நெருக்கமானவர்கள். சரியான படத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் டிஸ்கஸன் ஹோல்டு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
விஜய் ஏற்கனவே மோகன்ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். தற்போது மோகன் ராஜா தனி ஒருவன்-2 படத்திற்கான வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு அடுத்த படம் விஜய்-மோகன்ராஜா கூட்டணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.