கைதிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்; சிறை அதிகாரியை வச்சி செய்த தலைமை... ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி பகீர் பேட்டி.!
கைதிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்; சிறை அதிகாரியை வச்சி செய்த தலைமை... ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி பகீர் பேட்டி.!
சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி இராமச்சந்திரன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், "நடிகர் விஜய் புழல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பிரியாணி விருந்து அளித்தார். அந்த பிரியாணி விருந்தால் நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன்.
விருந்தில் பிரியாணி கொடுத்த விஜய் பரிமாறவும் செய்தார். ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் வழக்கம்போல இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்தார். அதனைத்தொடர்ந்து பேசிய நான், விஜயின் நற்செயலை குறிப்பிட்டு அவர் எம்.ஜி.ஆர் போல.
வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஜய் கட்டாயம் எம்.ஜி.ஆரை போல புகழின் உச்சிக்கு செல்வார் என கூறினேன். மறுநாளில் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அன்றைய நாளில் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது.
பிரியாணி விருந்து கொடுத்த மறுநாளில் வந்த செய்தியை பார்த்த அமைச்சர்கள், செய்தித்தாளில் வந்ததை தலைவரிடம் கொடுத்தனர். உடனடியாக என்னை பணியிடமாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. விஜய் அன்று உதவிக்கரம் நீட்டும் நிறுவனத்தின் மூலம் வந்ததால் நானும் தப்பித்தேன். பணியிடமாற்றத்தோடு முடிந்தது. இதுதான் பிரியாணி கொடுத்த கதை" என கலகலப்புடன் பேசினார்.
மேற்கூறிய விவகாரத்தில் டி.ஐ.ஜி குறிப்பிட்டது அதிமுக என்ற இயக்கமாக இருக்கலாம், அதனை தலைவராக அன்று நிர்வாகம் செய்து வந்த மறந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை என விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.