ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோதானாம்! யார் தெரியுமா?
Actor vijay is the first choice of autograph movie
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். இவரது படங்கள் பெரும்பாலும் கருத்துள்ளதாகவும், குடும்பங்கள் சம்மந்தப்பட்டதாகவும் இருக்கும். இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் சேரன். இவரது நடிப்பில், இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது திருமணம் என்னும் படத்தை இயக்கி அதில் நடித்தும் உள்ளார் நடிகர் சேரன். இந்நிலையில் ஆட்டோகிராப் படம் பதறிய சுவாரசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் இயக்குனர் சேரன்.
அதாவது ஆட்டோகிராப் படத்தில் நடிகர் விஜய்தான் நடிக்க இருந்தாராம். படத்தின் கதையும் அவருக்கு பிடித்துவிட்டதாம், ஆனால் கால் சீட் பிரச்சனை காரணமாக ஆட்டோகிராப் படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். படத்தை பார்டுத்துவிட்டு படத்தை ரசித்து பார்த்தேன் என விஜய் தன்னிடம் கூறியதாகவும் சேரன் கூறியுள்ளார்.