53% மக்கள் சிகரெட் பிடிக்க நடிகர்களே காரணம்; விஜய்யை உடனே கைது செய்யுங்க - அரசியல் கட்சி தலைவர் புகார்.!!
53% மக்கள் சிகரெட் பிடிக்க நடிகர்களே காரணம்; விஜய்யை உடனே கைது செய்யுங்க - அரசியல் கட்சி தலைவர் புகார்.!!
இளைய தளபதி விஜய், சஞ்சய், திரிஷா, சாண்டி மாஸ்டர் உட்பட பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் "நான் ரெடி தான்" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
ஆனால் படத்தின் பாடல் வரிகள் போதைப்பொருளுக்கு பலரையும் ஆட்கொள்ளும் வகையில் இருந்தது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பாடலை விஜய் பாடியதால் அவர் ரசிகர்களுக்கு போதைபொருள் உபயோகத்தை ஊக்குவிக்கிறாரா? என்ற கேள்வியும் இருந்தது.
மேலும் நான் ரெடி பாடலுக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வரும் அரசியல் கட்சித் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா, விஜய்யை கைது செய்ய கோரி காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
இந்த தகவலையறிந்த விஜய் ரசிகர்கள் ராஜேஸ்வரி பிரியாவை அவதூறாக பேசி வந்த நிலையில், அது குறித்தும் அவர் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் 53% மக்கள் சிகரெட் குடிக்க நடிகர்கள் தான் முக்கிய காரணம் என்று ஆய்வுகள் சொல்வதாக கூறினார்.