நடிகர் விஜய்யின் அடுத்த டார்கெட் எடப்பாடி பழனிச்சாமி!. களத்தில் இறங்கும் நடிகர் விஜய்!.
actor vijay will meet edapadi palanisami
சண் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிருந்தார். இதில் வரும் சில காட்சிகள் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வன்முறையை தூண்டும் வகையில் சர்கார் படத்தில் காட்சிகள் வைத்த இயக்குனர், நடிகர் மற்றும் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
சர்கார் சர்ச்சையில் நடிகர் விஜய்யை எச்சரித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம் என்று சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகரான விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் தலைவா பட விவகாரத்தின் போது, விஜய் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக கொடநாட்டிற்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.