நடிகர் விக்ரம் பிரபுவா இது! மீசையில்லாமல் இப்படி விறைப்பா நிக்கிறாரே! வைரலாகும் புதிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு
தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் முன்னணி நடிகர் பிரபுவின் மகன் ஆவார். பொதுவாகவே சினிமா துறையில் வாரிசு நடிகர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நிலையில் நடிகர் விக்ரம் பிரபுக்கும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, வானம் கொட்டட்டும், அசுரகுரு என ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் உருவான புலிகுத்தி பாண்டியன் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழரசன் இயக்கத்தில் உருவாகும் டாணாக்காரன் என்ற படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு மீசையில்லாமல் விறைப்பாக நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.