மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!
மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!
சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, சோனு சூட், மணிவண்ணன் உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் மதகஜராஜா (Madha Gaja Raja).
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 12 ஜனவரி 2024 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்கள் வெளியீடு; லிங்க் உள்ளே.!
கிலிம்ப்ஸ் வீடியோ வெளியீடு:
ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கபடுகிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் வெளியீடை முன்னிட்டு, கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சந்தானத்தின் காமெடி காட்சிகள் குறித்தவை இடம்பெற்றுள்ளன.
கதாநாயகனாக சந்தானம் உருமாறிய பின்னர் தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற சில படங்களை தவிர பிற படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதனால் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் வெளியாகியுள்ள மதகஜராஜா அவருக்கு நல்ல வரவேற்பை மீண்டும் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலகலப்பான காமெடியை கண்டு ரசியுங்கள்
இதையும் படிங்க: "எந்த குற்றவாளியையும் தப்பிக்க விடமாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி.!