பேட்ட பட இயக்குனருடன் இணையும் நடிகர் நானி.?
பேட்ட பட இயக்குனருடன் இணையும் நடிகர் நானி.?
பீட்சா திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் கார்த்திக் சுப்புராஜ். அதன் பிறகு ஜகமே தந்திரம், இறைவி, மகான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறியதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து கொண்டார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த சூழ்நிலையில்தான் நடிகர் நானி கடந்த சில மாதங்களாக ஒரு சில இயக்குனர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகின்றார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தின் கதையை அதன் இயக்குனரிடம் கேட்டார். ஆனால் அந்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தாண்டியதால், அதனை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் நடிகர் நானி கதை கேட்டிருப்பதாக தெரிகிறது.
கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்த கதை நடிகர் நானிக்கு பிடித்து போய்விட்டதால், தற்போது இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதோடு இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே வெகு விரைவில் நானி, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் புதிய திரைப்பட அறிவிப்பு வெளியாகயிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.