என்னை விட்டுட்டு போயிட்டாரு., நைட் முழுக்க நெனச்சு நெனச்சு அழுவேன் - காதல் தோல்வியால் கதறியழுத நடிகை ஆத்மிகா..!!
என்னை விட்டுட்டு போயிட்டாரு., நைட் முழுக்க நெனச்சு நெனச்சு அழுவேன் - காதல் தோல்வியால் கதறியழுத நடிகை ஆத்மிகா..!!
கோலிவுட்டில் மீசையமுறுக்கு, கோடியில் ஒருவன், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஆத்மிகா. இவர் சமீபத்தில் கூட உதயநிதியுடன் இணைந்து "கண்ணை நம்பாதே" என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
இந்த படங்களுக்கு இடையில் இவர் நடித்த நரகாசுரன் திரைப்படம் சில பிரச்சினைகளால் வெளிவராமல் இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று ஆத்மிகா தனது காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார்.
அதில், "எனது காதல் தோல்வி தான் என்னை மிகவும் பாதித்தது. என்னை காதலித்தவர் என்னை விட்டு விலகி சென்றுவிட்டார். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. அதை நினைத்து நினைத்து தினமும் இரவு அழுதேன்.
தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். மேலும், என் வாழ்க்கையில் பணமா? அல்லது புகழா? எது முக்கியம் என்று யாராவது என்னிடம் கேட்டால், நிச்சயமாக நான் பணம்தான் முக்கியம் என்று கூறுவேன்.
ஏனென்றால் அதுதான் எதார்த்தம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். நடிகை ஆத்மிகா கூறிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.