"எனக்கே தெரியாம எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க": திருமணம் குறித்து மனம்திறந்த நடிகை அஞ்சலி.!
எனக்கே தெரியாம எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க: திருமணம் குறித்து மண்திறந்த நடிகை அஞ்சலி.!
தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து, வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்த அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.
எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, இறைவி உட்பட பல படங்களில் நடித்த அஞ்சலி, சிங்கம்படத்தில் பாடல் ஒன்றிலும் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
முன்பை போல இல்லாமல் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகை அஞ்சலி, தற்போது திருமண வதந்தியில் சிக்கி இருக்கிறார்.
இவர் நடிகர் ஜெய்யை காதலித்து வந்ததாகவும், தொழில் அதிபர் ஒருவரை காதலித்து அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை அஞ்சலி, "எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடைபெற்று விட்டது என்பதை அறிந்து நான் சிரித்தேன். நடிகை என்பதால் அவர்களுக்கு தோன்றுவதை எழுதி, என் மீது விமர்சனம் வைக்கிறார்கள். அவை அனைத்தும் உண்மையில்லை" என்று தெரிவித்தார்.