உடல் எடை குறைத்து மீண்டும் பயங்கர அழகாக மாறிய நடிகை அஞ்சலி! புகைப்படம் உள்ளே!
Actress anjali latest slim look photos
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. போட்டோ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
இதனை அடுத்து அங்காடி தெரு படத்தில் கதாநாயகியாக நடித்தார் அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இதனை அடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை அஞ்சலி.
சினிமாவில் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. மேலும், பிரபல தமிழ் நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக தெரியவில்லை.
இந்நிலையில் கடந்த சில காலங்களாக உடல் எடை கூடி படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆட்டும் அளவிற்கு சென்ற அஞ்சலி தற்போது உடல் எடை குறைத்து மீண்டும் பயங்கர அழகாக மாறியுள்ளார். இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள்.