பிரபல தொழிலதிபருடன் திருமணமா... உண்மையை உடைத்த நடிகை அஞ்சலி!! பரபரப்பாகும் பதிவு...
தொழிலதிபருடன் திருமணமா... உண்மையை உடைத்த நடிகை அஞ்சலி!! பரபரப்பாகும் பதிவு...
தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சலியை குறித்து தொடர்ந்து பல கிசுகிசுக்கள் பேசப்பட்டு வருகிறது. அதில் அஞ்சலியும் ஜெய்யும் காதலிப்பதாகவும், பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்று விட்டதாகவும் வதந்தி நிலவி வந்தது. பின்னர் அஞ்சலி பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து பிரபல யூடியூப் சேனலில் பேசிய அஞ்சலி இந்த மாதிரியான செய்திகளை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடந்துவிட்டது. இதுபோல ஒரு நடிகையாக இருப்பதால் அவர் பற்றி வாய்க்கு வந்ததை, உண்மைக்கு புறம்பாக எழுதுகிறார்கள் என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார் அஞ்சலி.