திருமணமாகி 5 மாசம்தான் ஆகுது.! பெண்குழந்தைக்கு தாயான அண்ணாத்த பட நடிகை! வைரல் புகைப்படங்கள்!!
திருமணமாகி 5 மாசம்தான் ஆகுது.! குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை! வைரல் புகைப்படங்கள்!!
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நெல்லு என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த அஞ்சலி நாயர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படத்தில், சீனு இராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் அண்மையில் ரிலீசான மாமனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் திரைப்பட இயக்குநர் அனீஷ் உபாசனாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.அவர்களுக்கு ஆவ்னி என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் அஞ்சலி நாயர் உதவி இயக்குனர் அஜித் ராஜுவை காதலித்து, ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திருமணமாகி 5 மாதத்திலேயே அஞ்சலி நாயருக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.