அட..15 வருஷமா சினிமாவில் இருக்காரே!! நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு எவ்வளவு பார்த்தீங்களா!! ஷாக்கான ரசிகர்கள்!!
அட..15 வருஷமா சினிமாவில் இருக்காரே!! நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு எவ்வளவு பார்த்தீங்களா!! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆனால் அவர் அங்காடித்தெரு படத்தில் ஹீரோயினாக தனது அசத்தலான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்து பெருமளவில் பிரபலமானார். பின் அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, தரமணி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அஞ்சலி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலியின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதாவது ஏறக்குறைய 15 வருடங்களாக சினிமாவில் இருக்கும் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 10 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சலி தனது ஒரு படத்திற்கு 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.