" அந்த மாதிரி விஷயங்களிலிருந்து என் பெற்றோர் தான் என்னை காப்பாற்றினார்கள் " காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல் ..
அந்த மாதிரி விஷயங்களிலிருந்து என் பெற்றோர் தான் என்னை காப்பாற்றினார்கள் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல் ..
அமெரிக்காவைச் சேர்ந்தவரான அனு இம்மானுவேல், குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். அதன்பின், நிவின் பாலியுடன் கதாநாயகியாக அறிமுகமானார். தனது நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தற்போது தெலுங்கில் முக்கியமான ஹீரோயினாக இருக்கிறார். இவர் தமிழில் விஷாலுடன் 'துப்பறிவாளன்' படத்திலும், சிவகார்த்திகேயனுடன் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலும் நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'காந்தக் கண்ணழகி' பாடலுக்கு ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
தெலுங்கில் ரவிதேஜாவுடன் இணைந்து 'ராவணசூரா' படத்தில் நெருக்கமான படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரளித்த பேட்டியில், " நான் நடிக்க வந்தபோது என்னை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள். ஆனால் நான் இதைக் கண்டு பயப்படவில்லை.
என் குடும்பத்தினர் மூலம் இந்தப் பிரச்சனையை சமாளித்தேன். முன்னேற நினைக்கும் பெண்களை சில வக்கிர புத்தி கொண்டவர்கள் இப்படித்தான் நடத்துவார்கள். அப்போது பெண்கள் பயப்படாமல், துணிச்சலுடன் அவர்களை எதிர்கொள்ளவேண்டும்" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.