அட! கொழுகொழுவென கும்முனு இருந்த நடிகை அனுஷ்காவா இது! இப்படி ஆகிட்டாரே! வியந்துபோன ரசிகர்கள்!
நடிகை அனுஷ்கா உடல் எடை குறைத்து சிக்கென இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து செம கெத்தாக நடித்து வந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்திருந்த பாகுபலி-2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இதற்கிடையில் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா நோ அதை குறைக்க முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டார். மேலும் அதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்தார்.
பின்னர் மீண்டும் கொழுகொழுவென மாறிய அவர் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50வது பிறந்தநாளில் கலந்து கொண்ட அனுஷ்காவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் நடிகை அனுஷ்காவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.