விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை! யார் தெரியுமா?
Actress devatharshini daughter missed chance to act in bigil movie
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்துள்ளார். விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், பரியேறும் பெருமாள் புகழ் கதிர், மேயாத மான் புகழ் இந்துஜா போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னனர்.
இந்நிலையில் பிரபல நடிகை தேவதர்ஷினி பிகில் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்தும், தனது மகள் 96 படத்தில் நடித்தது குறித்து விஜய் பாராட்டி பேசியதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், தனது மகளுக்கு பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால், அந்த சமயம் அவருக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு இருந்ததால் பிகில் படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை தேவர்ஷினியின் மகள் நியதி 96 படத்தில் குட்டி ஜானுவுக்கு தோழியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.