வாவ்.. செம கியூட்!! முதன்முதலாக தன் குழந்தையை உலகிற்கு காட்டிய நடிகை திவ்யா.! வைரலாகும் அழகிய புகைப்படம்!!
வாவ்.. செம கியூட்!! முதன்முதலாக தன் குழந்தையை உலகிற்கு காட்டிய நடிகை திவ்யா.! வைரலாகும் அழகிய புகைப்படம்!!
சன் டிவியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் அர்னவ். திவ்யா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 6 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சீரியலில் நடித்தபோது திவ்யா மற்றும் அர்னவ்க்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி தொடரில் நடித்து வந்துள்ளார். மேலும் அர்ணவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை திவ்யா கர்ப்பம் அடைந்துள்ளார். இப்படியொரு நிலையில் அர்ணவ் தன்னை ஏமாற்றியதாகவும், அவருக்கு செல்லம்மா சீரியல் ஹீரோயினுடன் தொடர்புள்ளது, அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கினார் எனவும் திவ்யா வீடியோ வெளியிட்டு வழக்குபதிந்தார்.
மேலும் அர்ணவ்வும் திவ்யா மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட அர்ணவ் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின்னர் திவ்யாவை கண்டுகொள்ளவில்லை. அவர் செவ்வந்தி தொடரில் நடித்துக் கொண்டே கர்ப்பமாக இருக்கும் தன்னையே பார்த்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை திவ்யாவிற்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
அழகிய குழந்தையின் முகத்தை உலகிற்கு காட்டி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நடிகை திவ்யா, குழந்தைகள் கடவுளின் கைகளில் இருந்து வீசப்பட்ட நட்சத்திர தூசிகள், நட்சத்திரம் பிறந்ததால் அந்த பிறப்பை பெறுவதற்காக வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.அந்த புகைப்படம் வைரலான நிலையில் பலரும் குழந்தை கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.