படவாய்ப்புக்காக என்னை அதற்கு அழைத்தார்கள்... பிரபல நடிகை பரபரப்பு தகவல்.. பேரதிர்ச்சியில் திரையுலகம்.!
படவாய்ப்புக்காக என்னை அதற்கு அழைத்தார்கள்... பிரபல நடிகை பரபரப்பு தகவல்.. பேரதிர்ச்சியில் திரையுலகம்.!
திரைத்துறையில் படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருந்து வருவதாக பல நடிகைகள் பகிரங்க குற்றச்சாட்டை மீ டூ என்ற ஹேஷ்டேக் வாயிலாக முன்வைத்து இருந்தனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் நடந்த பாலியல் சர்ச்சை தொடர்பாக நடிகை பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.
தமிழ் மொழியில் வெளியான மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை எஸ்தர் நோரன்ஹா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படத்திலும் நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் வருடத்தில் பாடகரான நோயல் சீன் என்பவரை காதலித்து செய்து, ஒரு வாரத்தில் விவாகரத்தும் பெற்றார்.
சமீபத்தில் அவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நடிப்பில் ஆர்வம் இருந்ததால் திரைத்துறைக்கு வந்தேன். எனக்கு நடனமும் தெரியும், நடிக்கவும் தெரியும். அதன்பின்னரும் எதற்காக படவாய்ப்புக்கு படுக்கை சமரசம் செய்ய வேண்டும்?. தெலுங்கு திரையுலகில் இது எனக்கு நடந்தது.
திரைப்பட வாய்ப்பிற்காக எனது சுயமரியாதையை இழக்கவும், அவர்களின் அழைப்புக்கு உடன்படவும் தயாராக இல்லை. மேலும், நான் சினிமாவை மட்டுமே நம்பியும் இல்லை. திறமை இருந்தால் படவாய்ப்பு தேடி வரும்" என்று தெரிவித்தார்.