நடிகை கவுதமி செய்த காரியத்தால் குவியும் வாழ்த்துக்கள்! என்ன செய்தார் தெரியுமா?
Actress gauthami helped cancer patients on world cancer day
மனிதனை தாக்கும் கொடூர நோய்களில் ஓன்று கேன்சர். முன்பெல்லாம் கேன்சர் வந்துவிட்டாலே அவர் கட்டாயம் இறந்துவிடுவார் என்ற நிலைதான் இருந்தது. ஆனால், தற்போது அதிநவீன தொழில்நுட்பம், வளர்த்துவிட்ட மருத்துவ சாதனைகளால் இன்று புற்று நோயை குணப்படுத்தும் அளவிற்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது.
இந்நிலையில் ஒவொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறித்து. இந்தநாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலைமுடியை தானமாக வழங்குவது, பொருள் உதவி செய்வது என தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் மக்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சையால் குணமடைந்தார். தற்போது கேன்சர் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக கடந்த சில வருடங்களாக அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் புற்று நோய் உள்ளவர்களை தைரியப்படுத்துவதோடு, அவர்களின் மேல் சிகிச்சைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று புற்றுநோய் தினம் என்பதால் தனியார் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற நடிகை கவுதமி அங்குள்ள புற்று நோய் நோயாளிகளை சந்தித்தார். மேலும் புற்று நோய் பாதித்த குழந்தை வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தார். இந்த புகைப்படங்களை தற்போது வெளியாகியுள்ளது. அதே போல் இவரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.