நடிகை ஜெனிலியாவின் அழகான குழந்தைகளின் புகைப்படம் பாத்துருக்கீங்களா! இதோ!
Actress genilia kids photos
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் Tujhe Meri Kasam என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பாய்ஸ், சச்சின் போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜெனிலியா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்ஹ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை ஜெனிலியாவிற்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது 5 வயதாகும் இவர்களின் முதல் குழந்தையின் பெயர் ரியான். இரண்டாவது குழந்தையின் பெயர் ரகில் (3 வயது). இதோ அவர்களின் புகைப்படங்கள்.