#HBDHansika: பிறருக்கு உதவும் மனசு தான் சார் கடவுள் - தேவதை ஹன்ஷிகாவுக்கு இன்று பிறந்தநாள்.!
#HBDHansika: பிறருக்கு உதவும் மனசு தான் சார் கடவுள் - தேவதை ஹன்ஷிகாவுக்கு இன்று பிறந்தநாள்.!
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் சிறுவயதில் ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நிலையில், தெலுங்கில் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷுடன் "மாப்பிள்ளை" திரைப்படம் மூலமாக அறிமுகமாகி, எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, அரண்மனை ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.
மேலும், "வில்லன்" என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிப்பு என்பது ஒரு புறம் இருந்தாலும், மனிதாபிமான ரீதியான நடவடிக்கை கட்டாயம் இருக் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அவர் தொடர்ந்து தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.
கடந்த 2019-ஆம் வருடத்திற்கு பின்னர் அவர் நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி விட்ட நிலையில், அவர் நடித்த தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கின்றன.
அத்துடன் கடந்த 2008-ஆம் வருடம் சிறந்த நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது, 2014-ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது, 2015-ஆம் வருடம் விருப்பமான நடிகை விஜய் அவார்ட்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று ஹன்சிகா மோத்வானின் பிறந்தநாள் என்பதால் அவரின் பிறந்தநாளுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.