ஐஸ்வர்யா ராஜேஷை மீண்டும் அம்மாவாகிய விஜய்! தயக்கத்துடன் சம்மதித்த ஐஸ்வர்யா!
Actress ishwarya rajesh acting as a mom in lakshmi movie

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ஆறாது சினம் படங்களை தொடர்ந்து லக்ஷ்மி திரைப்படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நடிகர் பிரபுதேவா நடிப்பில், விஜய் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா, கோவை சரளா, கருணாகரன் பல இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாது. பல திரைப்படங்களில் அம்மாவாக நடித்துவிட்டேன், இனியாவது கமேற்சியால் நடிகையாக நடிக்க ஆசைப்பட்டேன். எனவே விஜய் சார் தன்னிடம் கதை கூறும் போது ஒரு விதமான தயக்கத்துட்டேனே கதை கேட்டேன். ஆனால் எனக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. எனவே அம்மாவாக நடிக்க சம்மதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்ப பெருமையா உள்ளது.
நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது. லட்சுமி படத்தில் வேலை செஞ்ச எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும் என்று கூறியுள்ளார்.