அடேங்கப்பா.. நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா! பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுப்பார் போல.! வைரல் வீடியோ!!
அடேங்கப்பா.. நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா! பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுப்பார் போல.! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். அதனைத் தொடர்ந்து அவர் சுந்தர புருஷன், சொல்லாமலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும், பின்னர் ஏராளமான படங்களில் துணை குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார்.
நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவேஉனக்காக தொடரில் துவக்கத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். பின்னர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகிய அவர் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அருவி தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஜோவிதா சமூக வலைதளங்களில் ஆகட்டிவாக இருக்கக் கூடியவர். இவர் அவ்வப்போது கலக்கலான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் பூஜா ஹெக்டே போல உள்ளதாக பாராட்டி வருகின்றனர்.