இந்தியன் 2 படத்திற்காக வெறித்தனமாக களரிபயிற்சி எடுக்கும் காஜல் அகர்வால்..! தீயாய் பரவும் வீடியோ..!!
இந்தியன் 2 படத்திற்காக வெறித்தனமாக களரிபயிற்சி எடுக்கும் காஜல் அகர்வால்..! தீயாய் பரவும் வீடியோ..!!
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் இந்தியன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், 25 வருடங்களுக்கு பின் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
இதன் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, சமீபத்தில் படப்பிடிப்பு பூஜை தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளனர். இப்படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
மேலும் இப்படத்திற்காக காஜல் அகர்வால் பயங்கரமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் "படத்திற்காக மாஸ் காட்டுறீங்க போங்க" என்று கூறிவருகின்றனர்.