"2 மாதத்தில் திருமணம்.. கிஃப்ட் எடுத்துட்டு வராதீங்க, இத மட்டும் பண்ணுங்க" - இரண்டாவது திருமணம் குறித்து காஜல் ஓபன் பதிவு..!!
2 மாதத்தில் திருமணம்.. கிஃப்ட் எடுத்துட்டு வராதீங்க, இத மட்டும் பண்ணுங்க - இரண்டாவது திருமணம் குறித்து காஜல் ஓபன் பதிவு..!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினாக பணியாற்றி பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில், அதன் பின்னர் டிஷ்யூம் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நடன இயக்குனர் சாண்டி விவாகரத்துக்கு பின் வேறு திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் நண்பர்களாக பழகி வரும் நிலையில், காஜல் தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் "அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம். அது சிறிய பார்ட்டி என்பதால் சிலர் மட்டுமே அழைக்கப்படுகின்றனர். எந்த பரிசுகளையும் கொண்டு வர வேண்டாம். என்னை திருமணம் செய்து கொள்ளும் யாரையாவது அழைத்து வாருங்கள்" என்று கேலியாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு கமெண்டுகளில் பதிலளித்த ரசிகர்கள் நாங்களும் வரலாமா? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.