படப்பிடிப்பின் போது புலம்பி தள்ளிய நடிகை கல்யாணி.. என்ன காரணம் தெரியுமா.?
படப்பிடிப்பின் போது புலம்பி தள்ளிய நடிகை கல்யாணி.. என்ன காரணம் தெரியுமா.?
இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன் 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான "ஹலோ" திரைப்படத்தில் தான் முதலில் அறிமுகமானார். சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது உள்ளிட்ட விருதுகளை முதல் படத்திலேயே பெற்றுள்ளார்.
தமிழில் சிவகார்த்திகேயன், சிம்பு என முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் கல்யாணி, தற்போது ஜெயம் ரவியுடன் "ஜெனி" படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக நடிக்க வருவதற்கு முன்பு கல்யாணி ஹிந்தியில் "கிரிஷ் 3" படத்தின் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
மேலும் தமிழில் விக்ரம் நடித்த "இருமுகன்" படத்திற்கு கலை இயக்குனராகவும் பணியாற்றினார். தமிழில் சிம்புவுடன் இவர் நடித்த "மாநாடு" திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்து வரும் கல்யாணிக்கு சினிமா கேரியரில் ஏறுமுகமாக உள்ளது.
இந்நிலையில், மலையாளத்தில் இவர் நடித்துள்ள "சேஷம் மைக்கில் பாத்திமா" படத்தில் மலையாளம் சரியாக பேசாத நிலையில் பக்கம் பக்கமாக வசனங்களை மனப்பாடம் செய்து பேசியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.