நடிகை கஸ்தூரிக்கு இப்படி ஒரு நோய் இருக்கா? என்ன நடந்தது? முழுவிவரம்!
Actress kasthoori affected with Insomnia
80 மற்றும் 90 இல் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்த்தூரி. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்துவரும் கஸ்த்தூரி அவ்வப்போது சமூக நலன் சார்ந்த விஷயங்களில் கருத்து தெரிவிப்பது உண்டு. தற்போது 44 வயது ஆன நடிகை கஸ்த்தூரி ஒரு சில படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார்.
இந்நிலையில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிக சோகமான விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்த்தூரி. கஸ்துரிக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர் மகள் பற்றி கூறுகையில் என்னுடைய பெண்ணிற்கு 7 வயசு இருக்கும் போது எப்போ பார்த்தாலும் ஜுரம் வந்துக்கிட்டே இருக்கும். ஜுரம்னு மருத்துவமையில் போய் நிப்போம். ஒருநாள் சாயங்காலம், ஹாஸ்பிட்டல்ல இருந்து போன். `உங்க பொண்ணுக்கு ஹீமோகுளோபின் குறைவா இருக்கு. உடனே, வாங்க’னு சொன்னாங்க.
சோகத்தின் உச்சியில் இருந்த எங்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.உங்க பொண்ணுக்கு`பிளட் கேன்சர்’ வந்திருக்கு’னு சொன்னாங்க. அந்த நிமிஷம் என்னோட உலகமே இடிஞ்சு விழுந்துடுச்சு. அதுக்குப் பிறகு 4 வருஷமா ஒரே போராட்டம்.
பலநாள் இதை நினைத்து நான் அழுதுகொண்டே இருந்தேன். சரியாக தூக்கம் வராது.ப்படித் தூக்கமில்லாம போனதுல எனக்கு `இன்சோம்னியா’ (Insomnia) வந்துடுச்சு. அப்போதான் எனக்கு கடவுள் மேல கோபம் வந்துச்சி. ஆனா, என் பொண்ணுக்கு ஒவ்வொரு தடவை ஊசி போடும்போதும், அவ வலியால அழும்போது அவளுக்கு நான் நம்பிக்கையைக் கொடுக்கணும்கிறதுக்கா சாமி பெயரை சொல்லி தைரியம் கொடுத்தேன். அவ கடவுள் நம்பிக்கையாலதான் அவளோட வலிகளை மறந்தா! என்று தெரிவித்துள்ளார் நடிகை கஸ்துரி.