அஜித் ரசிகர்கள் மரியாதை கெட்டவர்களா? டிவிட்டரில் தாக்கிய பிரபல நடிகை!
Actress kasthoori scold ajith fans in twitter
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கஸ்த்தூரி. 90 இல் இருந்த பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகை கஸ்த்தூரி. தற்போது ஒரு சில பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரபரப்பு கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்தநாளை ஒட்டி அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்க்கு தல ரசிகர் ஒருவர் நேற்று பாரதியாரின் பிறந்தநாள், அதற்கு வாழ்த்து தெரிவிக்காத நீங்கள் ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவது ஏன் என அசிங்கமான வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி , ட்விட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் அதிமேதாவி அண்ணன் அஜித்தின் ஒரே தம்பி ‘தல’ (வலி) செந்தில்குமார்! என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான தல ரசிகர்கள் கஸ்தூரியை வாட்டி எடுத்து வருகின்றனர்.
ரசிகர் ஒருவர் உங்களுடைய தரத்தை கெடுத்துகிறாதிங்க..உங்களை சீண்டுரவுங்களுக்கு பதில் கொடுங்க.அதை விட்டுட்டு அஜித் சார் பற்றி பேசறீங்க.அவரை பற்றி பேசுறத இதுவே முதலும் இறுதியா வைத்துக்குங்க.இதை நான் எச்சரிக்கிறேன்.என்று ட்வீட் செய்ய அதற்கு கஸ்தூரி அஜித் பெயரை கெடுக்கறது நானா மரியாதை கெட்ட ரசிகர்களா?என்று பதிவிட்டுள்ளார்.