சேலத்தில் நடந்த ஜாதிய விவகாரத்தை விசிக கண்டுகொள்ளாதது ஏன்?.. நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு..!
சேலத்தில் நடந்த ஜாதிய விவகாரத்தை விசிக கண்டுகொள்ளாதது ஏன்?.. நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு..!

சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரியில், கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் ஊர் மக்கள் மத்தயில் வைத்து அவமதிக்கப்பட்டார். விசாரணையில், இவ்வாறான செயலில் ஈடுபட்டது திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பது உறுதியானது. இந்த விஷயம் நடந்த 10 நாட்கள் கழித்து வீடியோ வைரலானதை தொடர்ந்தே விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, திமுக தலைமை ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்த விஷயம் குறித்து நடிகை கஸ்தூரி சங்கர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "இந்த கொடுமை நடந்து 10 நாளு ஆகுதாம். திமுக விசிக லாம் கண்டுக்கவேயில்ல. எந்த முன்களப்பு மீடியாவும் செய்தி போடல. ஏன்னா பார்ப்பனீயம், பானிபூரின்னு யாரையும் திட்ட முடியல. இன்னிக்கு வீடியோ வைரல் ஆனதும் திமுக சம்பந்தப்பட்டவரை 'தற்காலிகமாக 'நீக்கி சமூக நீதியை காப்பாத்திட்டாங்க.
இதான் இவங்க நடத்துற திராவிடமாடல் அறநிலையத்துறை லட்சணம். collection, election ரெண்டுக்குதான் கோயில் பக்கமே HRCE வருவாங்க. ஆனா கடவுள் இல்லைனு சொல்றவங்க ரெகுலர் ஆ சத்ருசம்ஹார யாகம் பண்ணுவாங்க. ஜாதி பாக்குறவன மன்னிக்கலாம், ஜாதி இல்லைனு ஊருக்கு உபதேசம் செய்யுறவன விடவே கூடாது" என்று தெரிவித்துள்ளார்.