ப்பா.. என்னா லுக்குமா! செம மாடர்னாக ரசிகர்களை சூடேற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுவரும் குடும
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுவரும் குடும்ப தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.
பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளார். அவர் அதற்கு முன்பு பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை காவியா அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது செம மாடர்னாக ஹாட் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.