பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள கயல் ஆனந்தியின் 'மங்கை': ட்ரைலர் வீடியோ உள்ளே.!
பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள கயல் ஆனந்தியின் 'மங்கை': ட்ரைலர் வீடியோ உள்ளே.!
கயல் ஆனந்தி, துஷி, ஆதித்யா கதிர் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மங்கை (Mangai). இப்படத்திற்கு தீசன் இசையமைத்து இருக்கிறார்.
ஆர்.ஜெ ஸ்டார் ஒளிப்பதிவில், குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் தயாராகியுள்ள மங்கை படம், பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கதையம்சமாக கொண்டுள்ளது.
கிரைம்-தில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலர் வைரலாகி வருகிறது.