மேலும் பயங்கர அழகாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Actress Keerthy suresh latest cute photos
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த மகாநடிகை திரைப்படம் ரசிகர்கள் மட்டும் இல்லாது சினிமா துறையினரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தற்போது நீண்ட ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றிற்கு போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் சில புகைப்படங்கள் செம வைரலாகிவருகிறது. அதில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படங்கள்.