பிரபாஸுடன் இணைகிறாரா சர்ச்சை நடிகை.?! முக்கிய வட்டாரத்திலிருந்து தகவல்.!
பிரபாஸுடன் இணைகிறாரா சர்ச்சை நடிகை.?! முக்கிய வட்டாரத்திலிருந்து தகவல்.!

பிரபல இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் சலார். இந்த திரைப்படத்திற்கு ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார். இதில் நடிகர் பிரிதிவிராஜ் வரதராஜ மன்னர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிரசாந்த் நீலின் திரைப்படமான கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்து இருந்தது.
கடந்த 2023 -ல் டிசம்பர் 22 மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகப் போவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் திரைப்பட கலைஞர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் லீட் ரோலில் பிரபல நடிகையான கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய நிலையில் கியாரா அத்வானிக்கு சலார் இரண்டாம் பாகத்தில் நடிக்கக்கூடிய அழைப்பு எதுவும் வரவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள்தான் இந்த படத்திலும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. நடிகை கியாரா அத்வானி, தற்போது சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.