அரண்மனை கிளி சீரியல் நடிகை வாழ்க்கையில் இப்படியொரு சோகமா! ஆனாலும் தைரியத்தை பார்த்தீர்களா!
actress kiruba life history
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருபா. அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும், அரண்மனைக்கிளி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் மற்றும் மேலும் பல தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தனது சிறு வயதில் ஏராளமான கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது எனக்கு சிறுவயதிலேயே அப்பா இல்லை. அதனால் எனது அம்மா 17 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்தது. ஆனால் நாளடைவில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மூன்று குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தேன். என் தாய் வீட்டிலும் என்னை எனக்கு உதவ யாரும் இல்லை. அதனால் நானே கஷ்டப்பட்டு மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தேன் அதுமட்டுமின்றி நானும் படித்து பட்டம் பெற்றேன்.
பின்னர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது நண்பர்கள் படத்தில் நடிக்கலாம் என யோசனை கூறினர். அதனைத் தொடர்ந்து முதலில் விளம்பரங்களில் நடித்தேன். பின்னர் வனமகன், தியா, மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனைத் தொடர்ந்தே தொடர்களில் நடிக்க வந்தேன். மேலும் நான் சினிமாவில் நடித்ததால் என் குடும்பத்தினர் என்னை ஏளனமாக பார்த்தனர். என் கணவர் என்னை மிரட்டினார். ஆனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு பிரச்சினை உண்டு ஆனால் சினிமா துறையில் வெளியில் தெரிகிறது.பெண்கள் கஷ்டப்படும் பொழுது போச்சே என சோகத்துடன் உட்கார்ந்து விடக்கூடாது. இப்படித்தான் வாழவேண்டும் என முடிவு செய்து கடினமாக உழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.