பிரபல நடிகை லட்சுமியின் மகள் யார் தெரியுமா? அட இந்த பிரபல நடிகையா?
Actress lakhsmi daughter ishwarya
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை லட்சுமி. இதுவரை பல நூறு படங்கள் நடித்துள்ளார் லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் லட்சுமி. பல பிலிம்பேர் விருதுகள், பல கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசின் விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றாலும், அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே அமைந்தது.
19 வயதாகும்போது கேரளாவை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் லட்சுமி. இவர்களது மகள்தான் நடிகை ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவும் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ரவுடியாக நடித்திருப்பார்.
மேலும் தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகும் அழகு தொடரிலும் நடித்துவருகிறார் நடிகை ஐஸ்வர்யா.