தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!!

பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!!

Actress lakshmi dead rumour viral Advertisement

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி என பல டாப் ஸ்டார்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. பின்னர் நாளடைவில் அவர் பல படங்களில் அம்மாவாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். நடிகை லட்சுமி தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் 

இந்த நிலையில் இன்று காலை முதல் நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக வதந்தி ஒன்று பரவியுள்ளது.ஆனால் உண்மையில், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை உயிரிழந்துள்ளது. அந்த யானையின் பெயர் லட்சுமி. இந்நிலையிலேயே நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகை லட்சுமி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், காலையிலிருந்து எனக்கு ஏராளமான போன் வந்தது. எனக்கு இன்று பிறந்தநாள் கூட இல்லையே அப்புறம் ஏன் இத்தனை பேர் போன் செய்கின்றனர் என்று விசாரித்தால் நான் இறந்து விட்டதாக தகவல்கள் பரவி வருவதாக கூறினர். பிறந்தால் ஒருநாள் இறந்துதான் ஆகணும். அதற்காக பயப்பட போவதில்லை. கவலைப்படவும் இல்லை. ஆனால் இதுபோன்று வேலை வெட்டியில்லாமல் வதந்தியை பரப்பி இருக்காங்களே என்று நினைக்கும்போது திருந்தவே மாட்டார்களா என தோன்றுகிறது.

 இந்த செய்தியை கேட்டதும் பல பேர் போன் செய்து என்னிடம் விசாரித்தார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது நான் மிகவும் ஆரோக்கியமாக,சந்தோஷமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#lakshmi #dead #rumour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story