மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த லட்சுமிமேனன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த லட்சுமிமேனன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இதைத் தொடர்ந்து இவர் நடித்த குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். இதனிடையே சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் உடல் எடை அதிகரித்திருந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திரமுகி 2 படத்தில் அவர் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து தற்போது இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
நடிகை லட்சுமி மேனன் சமூக வலைதளங்களில் இருந்தாலும் எப்போதாவது தான் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அதன்படி கடுந்தாண்டு ஆகஸ்ட் மாதம் போட்டோ வெளியிட்ட நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தற்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.