அடடா.. நம்ம கியூடிப்பை லாஸ்லியாவா இது?... செம்மையா இருக்காங்க பாருங்களேன்.!
அடடா.. நம்ம கியூடிப்பை லாஸ்லியாவா இது?... செம்மையா இருக்காங்க பாருங்களேன்.!
இலங்கை செய்திதொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் லாஸ்லியா.
இவர் பிக்பாஸில் இருக்கும் போது கவினுடன் காதல் செய்ததாக பல கிசுகிசுக்கள் வெளியாகிய நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததற்கு பின்னர், அது தொடர்பான எந்த தகவலும் இல்லை.
தற்போது சினிமா வாய்ப்புக்காக பல முயற்சிகளை எடுத்துவரும் லாஸ்லயா, நடிகர் ஆரியுடன் ஒரு திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அதில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து திரைத்துறை பக்கம் தன்னை பிரபல நடிகையாக மாற்ற முயற்சித்து வருகிறார்.
அத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள அவரின் புகைப்படமானது வைரலாகி வருகிறது.