செக்கச்சிவந்த உடை அணிந்து, ரசிகர்களின் மனதை தீப்பிடிக்க வைத்த மாளவிகா மோகனன்: வீக் எண்ட் ஸ்பெஷல்.!
செக்கச்சிவந்த உடை அணிந்து, ரசிகர்களின் மனதை தீப்பிடிக்க வைத்த மாளவிகா மோகனன்: வீக் எண்ட் ஸ்பெஷல்.!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போலெ என்ற மலையாள திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்த நடிகை, தமிழ் மொழியில் வெளியான பேட்ட திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.
இதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துவிட்டார். விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
எப்போதும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா, தற்போது வார இறுதி சிறப்பாக சிவப்பு நிறத்தினாலான உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.