காந்த கண்ணழகி மீனாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வெளியான புதிய தகவல்!!
காந்த கண்ணழகி மீனாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வெளியான புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இன்று வரை இருந்து வருகிறது.
நடிகை மீனா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், பார்த்திபன் என பலருடன் இணைந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காந்த கண்ணழகி நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.