திருமண நிகழ்ச்சியில், நடிகை நிவேதா தாமஸ் காலணிகளை கழட்டி வீசிவிட்டு குத்தாட்டம்! வைரல் வீடியோ!.
actress Nevetha thamas dancing in marriage function

தற்போது சினிமா நடிகைகள் எங்கு சென்றாலும் விசித்திரமான ஒன்றை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் சினிமாவை விட ஒரு சில நிகழ்ச்சிகளில் செய்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம்.
மேலும், சினிமா பிரபலங்கள் தாங்கள் செய்யும் வேலைகளை உடனுக்குடன் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவு செய்து விடுகிறார்கள்.
இதேபோன்று நடிகை நிவேதா தாமஸ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு தனது தம்பியுடன் காலணிகளை கழட்டிவிட்டு, குலேபா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ஆடிய விடியோவை அவரே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர், அட்டகாசம் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.