கைகளில் தீப்பந்தம்.! ரசிகர்களை மயக்கிய கார்த்தி பட இளம்நடிகையின் கவர்ச்சி ஆட்டம்.! வைரலாகும் வீடியோ!!
actress nora dance using fire
கனடாவை சேர்ந்தவர நடிகை நோரா பதேகி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் அதிகமாக ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார்.
நடிகை நோரா பதேகி கார்த்தியின் தோழா படத்தில் ஒரு குத்துப்பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். மேலும் பாகுபலி படத்திலும் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இவர் ஹிந்தியில் நடந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். மேலும் இவர் அண்மையில் கனடா நாட்டிலிருந்து நடிக்க வாய்ப்பு தேடிவந்து, மோசடி கும்பல் ஏஜென்சியிடம் சிக்கி ரூ 20 லட்சத்தை பறிகொடுத்ததை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் தற்போது இந்தியில் வருண் தவானின் ஸ்ட்ரீட் டான்ஸர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நோரா தீப்பந்தத்தை தனது கைகளில் வைத்து, மிக அழகாக பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி லைக்குகள் குவிந்து வருகிறது.