தளபதி விஜய்யின் GOAT படத்தில் இணைந்துள்ள அஜித் பட நாயகி.! அட.. யாருன்னு பார்த்தீர்களா!!
தளபதி விஜய்யின் GOAT படத்தில் இணைந்துள்ள அஜித் பட நாயகி.! அட.. யாருன்னு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு தளபதியாக வலம் வருபவர் விஜய். அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
GOAT படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஜய்யின் கெட்டப் வித்தியாசமாக இருப்பதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. GOAT படத்தில்பெரும் நட்சத்திரபட்டாளமே நடித்து வருகின்றனராம். பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், சினேகா, லைலா என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது GOAT படத்தில் அஜித் பட நாயகி பார்வதி நாயரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பார்வதி நாயர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது GOAT படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.