தனது ஒரு படத்தின் சம்பளம் முழுவதையும் கேரளாவிற்கு கொடுத்த பிரபலம்! யார் தெரியுமா?
Actress poonam pandey donated her full salary of one movie to kerala flood
கடந்த நூறு வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு மாதங்களாக கேரளாவில் கனமழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைத்து மாவட்டங்களும் வெல்ல நீரால் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக கேரளாவின் அணைத்து போக்குவரத்துகளும் முடங்கியுள்ளது. கனமழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3.3 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். மீட்பு படையினர் இவர்களை தேடி வருகின்றனர்.
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிவாரண பொருட்களும், நிதி உதவியும் அளித்து வருகின்றன.
இந்நிலையில், பிரபல மும்பை நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
முன்னதாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், விஜய்சேதுபதி 25 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.