அடேங்கப்பா..! 44 வயதில் இப்படியா! பயங்கர மார்டனாக நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படம்! வாயைப் பிளந்த நெட்டிசன்கள்!!
நடிகை பிரகதி செம மாடர்னாக தனது மகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்து வந்த அவர் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலான நடிகை பிரகதி தற்போது மீண்டும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் நடிகை பிரகதி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடனமாடிய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகளின் 16வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், நடிகை பிரகதி செம மாடர்னாக, டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் 44 வயதில் இப்படியா என வாயடைத்து போயுள்ளனர்.