சகுனி பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா? வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!
சகுனி பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா? வைரலாக கியூட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. அதனைத் தொடர்ந்து அவர் கார்த்தியின் சகுனி மற்றும் சூர்யாவின் மாஸ், ஜெய் நடிப்பில் வெளிவந்த எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மேலும் அவர் இறுதியாக அதர்வாவின் ஜெமினிகணேசனும் சுருளிராஜன் படத்தில் நடித்துள்ளார். நடிகை ப்ரணிதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். மேலும நடிகை ப்ரணிதா அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் அதனை கண்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.