பாலிவுட் நடிகருடன் காதல் வலையில் விழுந்த நடிகை ப்ரீத்தி சிங்... யார் அந்த நடிகர் தெரியுமா.?
பாலிவுட் நடிகருடன் காதல் வலையில் விழுந்த நடிகை ப்ரீத்தி சிங்... யார் அந்த நடிகர் தெரியுமா.?
தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி சிங். அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒண்ணு, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து இளசுகளின் கனவு கன்னியமாக நிகழ்ந்து வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற பிற மொழிகள் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி என்பவரை ப்ரீத்தி சிங் காதலித்து வருகிறார். இன்று டிசம்பர் 25 ஆம் தேதி தனது காதலனான ஜாக்கி பக்னானி 38 வது பிறந்தநாள் வாழ்த்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் வாழ்க்கைக்கு சான்ட்டா கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட் இவர் தான் என தனது காதலர் ஜாக்கி பக்னானியை அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.